Sunday, January 27, 2013

உஷ்ணத்தை குறைக்கும் கற்றாழை

உஷ்ணத்தை குறைக்கும் கற்றாழை

சோற்றுக் கற்றாழை நல்ல குளிர்ச்சியைத் தரக் கூடியது. மாதவிடாயைச் சீராக்கி, அதீத உதிரப்போக்கையும் கட்டுப்படுத்துவதால், சித்த மருத்துவத்தில் இதற்கு குமரி அல்லது கன்னி என்று பெயர். சித்தர்கள் காலத்தில் பெண்களுக்கு இதை லேகியமாகச் செய்து கொடுத்தார்கள். இந்தச் சோற்றுக் கற்றாழை மடலின் முனையில் இருந்து வெளிவரும் பாலை 'மூசாம்பரப் பால்' என்பார்கள். இந்தப் பாலில் இருந்து சில மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. உரிய வயதை அடைந்த பின்னரும் பூப்பெய்தாத பெண்களுக்கு 'மூசாம்பர மெழுகு' கொடுத்து வந்தால், ஈஸ்ட்ரோஜன் சரியான அளவில் உற்பத்தியாகி, பூப்பெய்துதல் நடக்கும். கற்றாழை ஜெல்லை மோரில் கலந்து குடிப்பதன் மூலம் மஞ்சள் காமாலை கட்டுப்படும். ரத்த அழுத்தம் சீராகும். பித்தம் தணிந்து உஷ்ணம் குறையும். உடலுக்கு நல்ல எதிர்ப்பு சக்தியைக் கொடுப்பதால், இது 'காயகல்பம்' மருந்தாகவே கருதப்படுகிறது.

No comments:

Post a Comment