Showing posts with label உணவே மருந்து. Show all posts
Showing posts with label உணவே மருந்து. Show all posts

Sunday, May 5, 2013

உணவே மருந்து







Showing posts with label உணவே மருந்துShow all posts
Saturday, March 16, 2013 0 comments

எல்லாக் கோளாறுக்குமே மணத்தக்காளிக் கீரை கைகொடுக்கும்

வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!

தோ காற்றில் கமகமக்க, வாசம்பா வீட்டுக்குள் நுழைந்தாள் அம்மணி. ''என்னடி வாசம்பா... மணத்தக்காளிக் கீரை வாசம் பக்கத்து ஊரு வரைக்கும் வீசுது'' என்றாள் மூச்சுவிட்டு.
 ''கழுகுக்கு மூக்கில வேர்த்த மாதிரி வந்துட்டியே... மணத்தக்காளியோட மகிமையை உன் வாயால கேட்கணும்னுதான் வாய்க்கு ருசியா சமைச்சிருக்கேன். வந்து ஒரு கை வாங்கிக்க.''
எச்சில் ஊற, சப்புக் கொட்டியபடியே சாப்பிட்டு எழுந்த அம்மணி, குவளையால் தண்ணியை மொண்டு கையைக் கழுவினாள்.
''ஆக்கியவளுக்குச் சட்டியும் பானையும்தான் மிச்சம் போ... கீரை முச்சூடும் காலி பண்ணிட்டியே அம்மணி... அம்புட்டு ருசியாவா இருக்குது?''
''பசி, ருசி அறிஞ்சு சாப்பிடறவ இல்லடி இந்த அம்மணி! மகிமை தெரிஞ்சு சாப்பிடறவ. அதான் இத்தனை வயசுலயும் எப்படி இருக்கேன் பாரு! பாசிப்பருப்பை வேகவெச்சுக் கீரையில சேர்த்து ருசியாத்தான் செஞ்சிருக்க. இது உடம்புக்கு எத்தனை குளிர்ச்சி தெரியுமா? வாய்ப் புண்ணு, வயித்துப் புண்ணு அம்புட்டும் சரியாப் போயிடும். சித்திரை வெயில் சுட்டெரிக்கப்போகுது. இந்த நேரத்துல நெதமும் மணத்தக்காளிக் கீரை சாப்பிடறது ரொம்பவே நல்லது வாசம்பா.''
''ஆமா... ராத்திரில கீரை சாப்பிடக் கூடாதுன்னு சொல்லுவாங்களே.. அது நெசமா?''
''கீரை... சீக்கிரத்துல ஜீரணமாகாது வாசம்பா. அதனாலதான் ராத்திரில சேத்துக்கிறதில்லை. ஆனா, மணத்தக்காளி கீரையைச் சேர்த்துக்கலாம். பருப்பு சேக்காம, கீரையை நல்லா வதக்கி புளி, உப்பு, வெங்காயம், தக்காளி, பூண்டு, பெருங்காயம், வத்த மிளகாய் சேர்த்துத் தொவையல் மாதிரி அரைச்சு, சுடுசாதத்தோட சேர்த்துச் சாப்பிடலாம். இந்தக் கீரைக்குத் தூக்கத்தை வரவழைக்கிற குணமும் இருக்கு. நல்லாத் தூக்கமும் வரும். உடம்புக்கு அழகையும் கொடுக்கும்.''
''மேலத்தெரு கண்ணாத்தாளுக்கு அடிக்கடி நெஞ்சு வலி வருதாமே.. அதுக்கு உன்னோட மணத்தக்காளி கீரைல ஏதாவது இருக்கா?''
''இல்லாமலா.... ஒரு கட்டு மணத்தக்காளிக் கீரையை உதித்து, நாலு பல் பூண்டு, சிட்டிகை மஞ்சள் தூள் சேத்து வேகவெச்சு அப்படியே சாப்பிட்டாப் போதும்.... இதய நோய்ப் பிரச்னையே இருக்காது. அவ்வளவு இதமா இருக்கும்டி, கீரைல கொஞ்சம் உப்புச் சேர்த்துச் சமைச்சுச் சாப்ட்டுவந்தா, நாள்பட்ட வாத நோய்கூட ஓடியே போயிரும்.''
''பட்டணத்துக்குப் படிக்கப்போன கருப்பாயி மகன், சிகரெட், குடிக்கு அடிமையாகி, ஆஸ்பத்திரியில் சேர்க்கிற அளவுக்குப் போயிடுச்சாம்.  புலம்பித் தள்ளிட்டா... அதுக்குக்கூட மருந்துதானே மணத்தக்காளி.''
''இருக்காதா பின்னே? சிறுநீரகம், கல்லீரல்னு எல்லாக் கோளாறுக்குமே மணத்தக்காளிக் கீரை கைகொடுக்கும் வாசம்பா!
அரைக் கிலோ மணத்தக்காளிக் கீரையை நிழல்ல உலர்த்தி, 10 கிராம் மிளகு, சீரகம் 20 கிராம், சோம்பு 30 கிராம் சேர்த்து நல்லாப் பொடிச்சிக்கணும். இந்தப் பொடியைத் தினமும் ரெண்டு வேளை சாப்பாட்டுக்கு முன்னால சாப்பிட்டு வந்தா, கல்லீரல், சிறுநீரகம் ரெண்டுமே ஸ்ட்ராங்காயிடும். குடல் நோவு,          நீரிழிவு, வாய்வுக் கோளாறும் குணமாயிடும். வாய்க் கசப்பு இருக்கிறவங்க, புள்ளத்தாச்சி, குழந்தை பெத்த பச்சை உடம்புக்காரி, இந்த மணத்தக்காளி வத்தலை எண்ணெயில் வறுத்து, சூடான சாதத்துல போட்டு, நெய் விட்டுச் சாப்பிடலாம். நல்லா செரிமானமாகும்.  நல்லாப் பசி எடுக்கும். தெனமுமே சாப்பிடுறது நல்லது. குழந்தை இல்லையேன்னு கவலைப்படறவங்களுக்கு மணத்தக்காளிப் பழம்கூட ஒரு வரப்பிரசாதம்தான் வாசம்பா. ஆம்பளைங்களுக்கு விந்து உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். கருத்தரிக்கச் செய்யவும், உருவான கரு நல்லா வலுவா இருக்கவும் மணத்தக்காளிப் பழம் உதவுது.''
'' 'அரச மரத்தைச் சுத்திட்டு அடி வயித்தைத் தொட்டுப் பார்த்துக்கிட்டாளாம்’னு சொல்லுவாங்க. ஆனா நெசமாலுமே மணத்தக்காளியைச் சாப்பிட்டுட்டு மடியைத் தடவிப்பாக்கலாம்னு சொல்லு.''
''சரியாச் சொன்னே! இதுவும் ஒரு காயக்கல்பம்தான். ஒரு கைப்பிடிக் கீரையோட 10 மிளகு, 3 திப்பிலி, 4 சிட்டிகை மஞ்சள் சேர்ந்து விழுதாக அரைச்சுத் தேன்ல கலந்து சாப்பிட்டா, நெஞ்சுல கபம், சளி, இருமல் நோய் எல்லாம் பறந்திடும். இருமல், சளி, குளிர், காய்ச்சலுக்கும் அற்புதமான மருந்து இது.''
''இன்னிக்குப் பேப்பரைப் பார்த்தியா அம்மணி? வெங்காயம் பக்கவாதத்தையே போக்கிடும்னு போட்டிருக்கு.''
''இது காலம் காலமாத் தெரிஞ்ச விஷயம்தாண்டி. பக்கவாதம் மட்டுமில்ல வாசம்பா... வெங்காயத்தை வெறுக்கிறவங்ககூட வாயைப் பிளந்து கேட்கும்படியா ஆயிரமாயிரம் மருத்துவ குணம் அதுல இருக்கு!''
''காயமே... இது பொய்யடா... வெங்காயமே மெய்யடா...'' - வாசம்பா பாட... அம்மணியின் அடுத்த டாபிக் வெங்காயம்!
பாட்டிகள் பேசுவார்கள்...
Tuesday, January 29, 2013 0 comments

வெள்ளைபடுதலைக் குணமாக்கும் எள்ளு உருண்டை!

பூப்படைந்த பெண்களில் அதிகமானோருக்கு உள்ள பிரச்சினை தான் வெள்ளைபடுதல் எனப்படும் (Vaginal Discharge) பிறப்புறுப்பின் கருப்பைக் கழுத்து வழியே எச்சில் போன்ற திரவம் சுரப்பதாகும். பெரும்பாலான பெண்களுக்கு இப் பிரச்சினை இருக்கின்ற போதும்; பிறப்புறுப்பினைத் தொற்று நோய்களிலிருந்து கழுவிச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் தான் வெள்ளைபடுதலினைக் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். ஆனாலும் ஒரு சில சத்தான உணவுகளை உட்கொள்வதன் மூலமாகவும் இந்த வெள்ளைபடுதலைக் குணப்படுத்த முடியும். 
அந்த வகையில் வெள்ளைபடுதல், மலச்சிக்கல், மாதவிடயாயின் போது ஏற்படும் வலி, குழந்தை பெற்ற பெண்களின் தசைகள் இறுக்கமாக எனப் பல பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் கொடுக்கவல்ல "எள்ளுப் பணியாரம் எப்படிச் செய்வது" பற்றிய குறிப்பு

தேவையான பொருட்கள்:
*எள்ளு- 150-200g எள்ளு (Sesame Seeds)
*ஒரு முழுத் தேங்காயின் துருவிய தேங்காய்ப் பூ. (Coconut Powder)  
*வெல்லக் கட்டி & சர்க்கரை: (Jaggery Cube)
*சிறிதளவு சர்க்கரை (Sugar) 

இனி எள்ளு உருண்டை எப்படிச் செய்வது- செய்முறை! 

*எள்ளைப் பொன் பருவமாகும் வரை- அல்லது எள்ளிலிருந்து எண்ணெய் சொட்டும் வரை வறுத்தெடுக்கவும்.

*தேங்காய்ப் பூவை தனியாக கொட்டி, பதமாகும் வரை வறுத்தெடுக்கவும்.

*வெல்லக் கட்டியினைச் சிறிது சிறிதாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

*இனி வறுத்தெடுத்த எள்ளு, தேங்காய்ப்பூ, வெட்டி வைத்த சர்க்கரை, சிறிதளவு சீனி முதலியவற்றை ஒன்றாக கொட்டி மிக்ஸியில் மிக்ஸ் பண்ணி அரைக்கவும். (அரைக்கும் மிக்ஸிக் குவளையில் தண்ணீர்த் தன்மையோ, எண்ணெய்த் தன்மையோ இல்லாது பார்த்துக் கொள்ளவும்).

*அரைத்தெடுத்த எள்ளுக் கலவையினை, உருண்டையாக்கி (Sesame Balls) காற்றோட்டமான பகுதியில் ஒரு தட்டில் வைக்கவும்.

*இரண்டு மணி பின்னர் உங்களின் நாவிற்குச் சுவையூட்டும் எள்ளுருண்டை தயார். 

*நீங்கள் விரும்பினால் சிறிதளவு கோதுமை மாவில் தண்ணீர் சேர்த்துக் கலவையாக்கி, அந்தக் கலவையினுள் எள்ளுருண்டையினை உருட்டி எண்ணெயிலும் பொரித்தெடுக்கலாம்.


இது தான் எள்ளு உருண்டை செய்வதற்கான ரெசிப்பி
Sunday, January 27, 2013 0 comments

மூலிகை சமையல் -- சர்க்கரை கறிவேப்பிலை


மூலிகை சமையல் 
சர்க்கரை கறிவேப்பிலை

           ன்னைக் கறிவேப்பிலை போலப் பயன்படுத்தி விட்டார்கள் என்று அடிக்கடி பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். கறிவேப்பிலை எந்த அளவுக்கு நன்மை பயக்கக்கூடியது என்பதற்கு இந்த வாசகங்களே போதுமானவை.

புதினா, கொத்துமல்லி, போல கறிவேப்பிலை யையும் வாசனைக்காக காலங்காலமாக பயன்படுத்தி வருகின்றோம்.

இது கீரை வகையைச் சேர்ந்தது அல்ல என்றாலும் கீரைகளுக்கு உள்ள அனைத்துச் சத்துக்களும் இதில் நிறைந்துள்ளது.

எல்லா விதமான சமையலுக்கும் கறிவேப்பிலை பயன்படுத்துகிறோம்.  ஆனால் இதை சாப்பிடுகிறோமா என்று பார்த்தால் இல்லை.  அதை ஒதுக்கி வைப்பவர்கள்தான் அதிகம் உள்ளனர்.

கறிவேப்பிலையை ஒதுக்குபவர்கள் வெகு விரைவில் ஆரோக்கியத்தை இழப்பார்கள்.  நாளடைவில் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைவார்கள்.

அறிவிலும் ஆக்கத்திலும் சிறந்த நம் முன்னோர்கள் கறிவேப்பிலையின் பயனை அறிந்தே அதை சமையலுக்கு பயன்படுத்தியுள்ளனர்.  எனவே குழந்தைகளுக்கு கறிவேப்பிலை தினமும் உணவில் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டு வரவேண்டும்.

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, பி2, சி போன்ற உயிர்சத்துக்கள் நிரம்பியுள்ளன.  சுண்ணாம்புச் சத்தும் இரும்புச் சத்தும் அதிகம் உள்ளன.

சர்க்கரை நோயாளிகளுக்கு
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக மயக்கத்துக்கு ஆளாவார்கள்.  மேலும் கைகால் வலி கண்பார்வை குறைபாடு உண்டாகும்.  இவர்கள் அடிக்கடி கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  

கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை மாலை குடித்து வந்தால் உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கும்.

மன அழுத்தம் நீங்க
அதிக மன அழுத்தம் காரணமாக சிலர் எப்போது பார்த்தாலும்  குழப்பமாகவே இருப்பார்கள்.  எந்த வேலையை முதலில் செய்வது என்று புரியாமல் தவிப்பார்கள். இவர்களுக்கு அருமருந்தாக கறிவேப்பிலை திகழ்கிறது.

கறிவேப்பிலையை நன்கு நீரில் அலசி அதனுடன் சிறிது இஞ்சி, சின்ன வெங்காயம், 2 பூண்டு பல், சீரகம், புதினா அல்லது கொத்தமல்லி கலந்து நன்கு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து நன்கு கலக்கி மதிய உணவில் சாதத்தோடு கலந்து சாப்பிட்டு வந்தால் மன இறுக்கம், மன உளைச்சல், மன அழுத்தம் குறைந்து குழப்பமான மனநிலை மாறும்.  மேலும் ஞாபக சக்தியைத் தூண்டும்.  உடலை புத்துணர்வு பெறச் செய்யும்.

இளநரை மாற
இன்றைய நவீன இரசாயன உணவு வகைகளாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளாலும் உடலுக்குத் தேவையான சத்துக்களைக் கொடுக்க முடியவில்லை.  இதனால் இளவயதிலேயே தலைமுடி நரைக்க ஆரம்பித்து முதுமையை வெகுவிரைவில் கொண்டு வந்து விடுகின்றது.  இவர்கள் தினமும் உணவில் சேர்க்கும் கறிவேப்பிலையை ஒதுக்காமல் சாப்பிட வேண்டும்.
கறிவேப்பிலையை தலையில் தேய்க்கும் எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவைத்து பாட்டிலில் அடைத்து தலையில் தேய்த்து வந்தால் இளநரை மாறும்.

கொழுப்புச் சத்து குறைய
இன்று நாம் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளையே அதிகம் சாப்பிடுகிறோம்.  இதனால் இரத்த அழுத்தம், உடல் பருமன், உடல் சோர்வு போன்றவை உருவாகின்றது.  இந்த கொழுப்புப் பொருள் பெரும்பாலும் எண்ணெயின் மூலம் அதிகம் உடலில் சேர்கின்றது.  ஒரு லிட்டர் எண்ணெயில் 10 கறிவேப்பிலை போட்டு காய்ச்சி வடிகட்டினால் எண்ணெயில் உள்ள கொழுப்புச் சத்து நீங்கும்.

சுவையின்மை நீங்க
சிலருக்கு உணவு உண்ணும்போது அதில் அதீத சுவை இருந்தாலும் கூட அதை அவர் நாவினால் உணர முடியாது. இந்த சுவை அறியாதவர்களுக்கு எதைச் சாப்பிட்டாலும் மண்ணைத் தின்பது போலத்தான் இருக்கும். நிறைய குடும்பத்தில் கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட இதுவும் ஒரு காரணமாகின்றது.  

  இவர்கள் கறிவேப்பிலை, சீரகம், இஞ்சி, சிறிதளவு பச்சை மிளகாய், புளி, உப்பு, பூண்டு இவைகளை நன்கு அரைத்து சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் சுவையை உணரும் 

தன்மை நாவிற்கு கிடைக்கும்.

வயிற்றுப் போக்கு குணமாக

கறிவேப்பிலை - 20 கிராம்

சீரகம்       - 5 கிராம்

இரண்டையும் அரைத்து வாயில் போட்டு வெந்நீரை குடிக்க வேண்டும்.  சிறிது நேரம் கழித்து  ஒரு டீஸ்பூன் சுத்தமான தேனையும் பருக வேண்டும்.  இவ்வாறு மூன்று வேளைகள் அருந்தி வந்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

· குடலில் உள்ள கிருமிகளை அழிக்கும்.

· கண் பார்வை தெளிவடையும்

· இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

· மது போதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலையின் சாறு கொடுத்தால் போதை உடனே குறையும்.

· கை கால் நடுக்கத்தைப் போக்கும்.

· வீக்கம், கட்டிகள் போன்றவற்றைக் குணப் படுத்தும்.

· நகங்களில் ஏற்படும் நோய்களைக் குணப் படுத்தும்.

இவ்வளவு மருத்துவப் பயன்களைக் கொண்ட கறிவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்து வந்தால் நோயின்றி நூறாண்டு வாழலாம்.
Saturday, January 26, 2013 0 comments

இஞ்சித் தேன் --இயற்கை உணவு

என்னென்ன தேவை?

இஞ்சி - 150 கிராம், 
தேன் - 150 மி.லி., 
ஏலக்காய் தூள் மற்றும் கிராம்புத் தூள் - தலா 5 கிராம்.

எப்படிச் செய்வது?


இஞ்சியைத் தோல் சீவி, தண்ணீர் விடாமல் இடித்துச் சாறு எடுத்து, ஒரு சிறிய கிண்ணத்தில் அசையாமல் வைக்கவும். 10 நிமிடம் கழித்து, கீழே  மாப்படிவு படிந்திருக்கும். மேலே தெளிந்த சாறு இருக்கும். அதனைச் சாய்த்து எடுத்துத் தேன் சேர்த்து, அடுப்பில் வைத்து, பாகு பதம் வரும் வரை  கிளறி, ஏலக்காய் தூள், கிராம்புத் தூள் சேர்த்துக் கிளறி, இறக்கி, பாத்திரத்தில் மூடி வைக்கவும். இதை தினம் 2 டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து  தண்ணீரில் கலந்து உண்டு வந்தால், நெஞ்செரிச்சல், மசக்கை குணமாகும்.
Tuesday, January 15, 2013 0 comments

சின்ன விஷயங்களின் அற்புதம்! -- உணவே மருந்து,

Tuesday, January 15, 2013 1 comments

உயர் ரத்த அழுத்தம் குறைய... மருத்துவ டிப்ஸ்

Tuesday, January 15, 2013 0 comments

வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்! --- உபயோகமான தகவல்கள்,


''தொவையல், கொளம்பு, கூட்டுன்னு நம்ம சாப்பாட்டுச் சமாச்சாரத்துக்குப் பெரண்டை ரொம்பப் பெரயோசனம்னு சொல்வாக. நுனியாப் பார்த்துப் பறிக்கத் தெரியாம, அடித்தண்டையும் சேர்த்துப் பறிச்சு சமைச்சா அரிப்பும் எரிச்சலுமா இருக்கும். அதுக்குப் பயந்தே நம்ம  புள்ளைக பெரண்டைய சமையல்ல பயன்படுத்துறதையே மறந்திடுச்சுக. அதான் வயித்துவலி வாதனைன்னு அடிக்கடி படாதபாடு படுதுக. சின்னஞ்சிறுசுகளுக்குத்தான் இதப் பத்தி தெரியலைன்னா, வளந்து சாய்ஞ்ச ஒனக்குமா இது தெரியாது?''
- 'வைத்திய’ அம்மணி நீட்டி முழக்க 'பழமொழி’ வாசம்பாவுக்கு முகம் கோணிப் போனது. சேலைத்தலைப்பை எடுத்து முகம் ஒற்றிக்கொண்டபடியே பேசத் தொடங்கினாள்.
''தாளம்பூவா இருந்தாலும் வாசம் வீசினாத்தாண்டி தெரியும். மரஞ்செடி கொடிதான் வாழ்க்கைன்னு வாழ்ந்தவ நீ. நான் ஊரு வம்பு இழுக்கவே நேரம் போதாதுன்னு திரிஞ்சவ. சாதாரண ஒரு கொடியில இவ்வளவு சத்து இருக்குன்னு எனக்கெப்புடித் தெரியும்?''
''வயித்துப் பிரச்னைக்குப் பெரண்டையத்  தொவையலா அரைச்சுச் சாப்பிட்டாலே சரியாகிடும். குழந்தைங்களுக்கு உண்டாகுற வாந்தி பேதி பிரச்னைக்கும் பெரண்டை அற்புதமான மருந்து. பெரண்டைய நல்லா உலர்த்தி சாம்பல் மாதிரி வெச்சுக்கணும். ஒரு கிலோ சாம்பலை மூணு லிட்டர் தண்ணியில கரைச்சு நல்லா வடிகட்டி அரை நாளைக்குத் தெளிய வைக்கணும். அதைப் பீங்கான் பாத்திரத்தில் ஊத்தி பத்து நாளைக்கு வெயில்ல காயவைக்கணும். நீர் நல்லா சுண்டிப்போய் உப்பு மாதிரி படிஞ்சிடும். குழந்தைங்களுக்கு வாந்தி பேதி வர்றப்ப எல்லாம் இந்த உப்புல ஒரு கிராம் அளவுக்கு எடுத்து அதைப் பால்ல கலந்து கொடுத்தா உடனே சரியாப் போயிடும். வாந்தி பேதி நிக்கிறது மட்டுமில்ல... குழந்தைங்களுக்கு நல்லா பசி எடுக்கவும் இந்தப் பெரண்டை உப்பு பிரமாதமான மருந்து. நீ வீட்டுக்குப் போன உடனே முதல் வேலையா இந்தப் பெரண்டை உப்பைத் தயார் பண்ணி வெச்சுக்க. அதை விட்டுட்டுக் குழந்தை அழுவுதுங்கிற சின்னச் சின்ன விசயத்துக்கெல்லாம் பதறி ஊரைக் கூட்டாதே... ஆமா...''
''நீ ஏண்டியாத்தா இப்புடிச் சலிச்சுக்குறே... 'காடு முழுக்கக் கூவுனாலும் கூடுக்கு வழியில்லையாம் குயிலுக்கு’ன்னு சொல்ற மாதிரி, ஊரையே சுத்தி வந்தாலும் சீக்குப் பிணியின்னா உங்கிட்டதானே சேதி கேக்க வேண்டியிருக்கு.'' - நைச்சியம் பேசியபடியே பெரண்டையின் கொழுந்துப் பகுதியாகப் பார்த்து பறிக்கத் தொடங்கினாள் வாசம்பா.
'' 'ஊரையே ஆண்டாலும் உள்ளங் காலுதான் தாங்குமாம்’னு ஒரு சொலவடை சொல்லுவியே... அது யாருக்குப் பொருந்துதோ இல்லையோ... உனக்குப் பொருந்தும்டி. சடங்கு, சம்பிரதாயம்னா சாப்பாட்டைப் போட்டுட்டு முதல் ஆளா முன்னுக்கு நிக்கிறவ நீ. அப்படிப்பட்ட உனக்குப் பெரண்டையப் பத்தி எப்புடித் தெரியாமப் போச்சு? பொண்ணாப் பொறந்த அத்தனை பேருக்குமே பெரண்டை பெரிய வரம்டி.''
''பொம்பளைக்கும் பெரண்டைக்கும் என்னடி சம்பந்தம்?''
''மாசத்துல மூணு நாளு பொண்ணுங்க படாதபாடு படுறாங்க இல்ல... முதுகு வலி, இடுப்பு வலி, ரத்தப்போக்குன்னு அந்த மூணு நாட்களோட அவஸ்தையைச் சொல்லி மாளாதுல்ல? அந்த நாட்கள்ல பிரண்டையைச் சாப்பாட்டுல சேத்துக்கிட்டா வலி குறைஞ்சு நல்லாத் தூக்கம் வரும். மாதவிலக்கு சரியா இல்லாமலும் ரத்தப்போக்கு அதிகமாவும் இருக்கிறதால அல்லாடுற பொண்ணுங்க பெரண்டையைத் தீயில வதக்கி, சாறு பிழிஞ்சு அதைச் சாப்பிட்டா நல்ல நிவாரணம் கிடைக்கும்.'' - அம்மணி சொல்லச் சொல்ல ஆச்சர்யக் கண் கொண்டு கவனித்த வாசம்பாள் அத்தனை பெரண்டையையும் பறித்துவிடும் ஆவலில் பனை மரத்தின் மட்டையைப் பிடித்து இழுத்தாள். பச்சை மட்டை அப்படியே வளைய, ''ஆ... அம்மாடி...'' என்றபடியே சறுக்கி விழுந்தாள் வாசம்பாள். அம்மணிக்கு சிரிப்புத் தாளவில்லை.
''ஏண்டி, மனசுக்குள்ள வயசுப் புள்ளைன்னு நெனப்போ... தவ்விக் குதிச்சு விளையாடுற வயசாடி இது?'' என்றபடியே விழுந்து கிடந்த வாசம்பாவை கைதூக்கிவிட்டாள் அம்மணி.
'' 'தோடு மாட்டத் தெரியாதவ மாடு கட்டத் திரிஞ்சாளாம்’கிற மாதிரி முன்னப் பின்னத் தெரியாத வேலையில இறங்கினா இப்படித்தாண்டி ஆகும். பெரண்டையப் பத்தி நீ பெரமாதமாப் பேசுன உடனே நானும் ஆசையில நாலு கொழுந்தக் கிள்ளிடலாம்னு நெனச்சேன். இடுப்பே பெசகிக்கிற அளவுக்கு இப்புடி விழுந்துட்டேனே...'' - வலியோடு இடுப்பைப் பிடித்தபடி எழுந்தாள் வாசம்பா பாட்டி.
''ரொம்ப நோவாதடி... கை, காலு அடிபட்டு ஏற்படுற வலிக்கும் பெரண்டை நல்ல மருந்து. பெரண்டையோட வேரைக் கழுவி எடுத்து நல்லா உலர வெச்சு அதைப் பொடியாக்கி சாப்பிட்டா உடைஞ்சுபோன எலும்புகூட நல்லா ஒட்டிக்கும். இப்போ நீ விழுந்த விழுக்காட்டுக்கு எலும்பெல்லாம் உடைஞ்சிருக்காது. இந்த லேசான வலிக்கு பெரண்டையோட வேரைப் பொடியாக்கி வெந்நீர்ல குழைச்சு வலி எடுக்குற இடத்துல பத்துப் போட்டாலே சரியாகிடும். அதனால, முக்கி முனகாம தெம்பா எந்திரி!''
''இதுதான் முள்ளை முள்ளாலேயே எடுக்குற வேலையா... பெரண்டையப் பறிக்கப்போயி விழுந்ததுக்கு பெரண்டையே மருந்தா? நல்லா இருக்குடி உன்னோட வைத்தியம். நீ பயப்படுற அளவுக்கு இந்த உடம்புக்கு நோவு ஆகிடலை. இது வரவரிசி சாப்புட்டு வளர்ந்த உடம்புடி.'' என வாசம்பா சொல்லும்போதே அம்மணிக்கு நாவில் எச்சில் ஊறத் தொடங்கிவிட்டது.
''ஏய்... வரவரிசி சாப்புட்டு எத்தனை வருசமாயிடிச்சு? ஒன்னோட வூட்ல இருந்தா ஒரு படி கொடுத்து அனுப்புறியாடி?''
''கொடுத்தெல்லாம் அனுப்ப முடியாது. நல்ல நாளாப் பாத்து வூடு வந்து சேரு. வயிறு குளிர வரவரிசி சமைச்சுப் போடுறேன். எங்கையால சாப்புட்டுப் பாரு...'' -முகத்தைச் சுளித்தபடி வாசம்மா சொல்ல, ''கோயிலுக்குக் கும்பாபிசேகம் பண்றப்ப வரகை கும்பத்துக்குள்ள ஏன் வைக்கிறாங்கன்னு ஒனக்குத் தெரியுமா?'' என இடைமறித்தாள் அம்மணி. ''தெரியலையே...'' என வாசம்பா உதடு பிதுக்க, அம்மணி தொடர்ந்தாள்.
''வரகு ஆயிரம் வருஷங்களுக்கு உயிரோட இருக்குற தானியம். கும்பத்துல வைக்கிற வரகை ஆயிரம் வருஷத்துக்கு அப்புறம் அள்ளி விதைச்சாலும், அது வளர்ந்து பயிராகிடும். நமக்கு அப்புறம் வர்ற சந்ததி பசி, பட்டினின்னு சாப்பாடு கிடைக்காம அல்லாடிரக் கூடாதுங்கிறதுக்காக நம்ம மூதாதையர்கள் ஏற்படுத்தி வெச்ச பழக்கம்டி அது!''
-வாசம்பா ஆச்சர்யமாகப் பார்க்க வரகு புராணம் தொடர்ந்தது.
Tuesday, January 15, 2013 1 comments

கடுக்காய்த் தோல் பொடி---உணவே மருந்து,

Thursday, January 10, 2013 0 comments

உயிர்காக்கும் தயிர் --- உணவே மருந்து,

உயிர்காக்கும் தயிரா? அது எப்படி? என்று அறிய ஆவலாக வந்துள்ள அன்பு நண்பர்களுக்கு வணக்கம். 

சிறுவயது முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உணவில் சேர்த்துக்கொள்ளும் ஒரு சிறந்த உணவுப்பொருள் தயிர் என்றால் அது
மிகையாகாது.

தயிரில் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கொடுக்கக்கூடிய மருந்துப்பொருட்கள் உள்ளது. வெறும் ருசிக்காகவே உண்பது இதுவல்ல. இதில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. அது என்னென்ன? வாங்க பார்த்துடலாம்.

உயிர்காக்கும் தயிர் என்று குறிப்பிட்டிருக்கிறேனே அது எப்படி என்கிறீர்களா?

நோயில்லா உடலே அதிக வாழ்நாளைக் கொடுக்கும். உடலில் நோய்கள் பல வரக்காரணமே உடற்சூடுதான். அதனால் உடலில் பல்வேறு இராசயன மாற்றங்கள் ஏற்பட்டு, வெப்பத்தால் ஒவ்வொரு உடல் உறுப்பும் தனது பணியை சரிவர செய்யாமல், இயங்காமல் இருந்துவிடும். இதனால் விளைவது நோய்கள். 

உடற் சூட்டை தணிப்பதில் தயிர் மாபெரும் பங்கு வகிக்கிறது. தலையில் தயிரைத் தேய்துக்கொள்வதன் மூலம் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதோடு, நல்ல ஆரோக்கியமான, பளபளக்கும் தலைமுடியைப் பெறலாம். உடற் சூடும் தணியும். 

உடல் சூடு தனிவதால் , உடலில் உள்ள உள்ளுறுப்புகள் சரிவர வேலை செய்யத்துவங்கும். உடலும் சீரான நிலைக்கு வந்துவிடும். இப்போது சொல்லுங்கள் தயிர் ஒரு உயிர்காக்கும் உணவுப்பொருள்தானே..

மேலும் தயிரில் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன?

1. பால் உடலுக்கு நல்லதுதான். ஆனால் பாலைவிட தயிரே சிறந்த உணவுப்பொருள். இது பாலைவிட அதிவிரைவாக ஜீரணமாகிவிடுகிறது. தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் குடலில் உள்ள தீமை தரும் பாக்டீரியாவை அழிக்கிறது. 
2.உடலில் விரைவாக ஜீரணசக்தியை தூண்டும் பாக்டீரியாக்களை உருவாக்குகிறது. இதனால் உணவு எளிதில் ஜிரணமாகிவிடும். மருத்துவர்கள் கூட தயிரை சிபாரிசு செய்வார்கள். நோய்வாய்ப்பட்டவர்கள் முதலில் ஆகாரமாக தயிர் சாதத்தை எடுத்துக்கொள்வார்கள். தயிரிலுள்ள Lactobasil ஜீரண சக்தியைத் தூண்டுகிறது. 
3. வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல் போன்ற உபாதைகளை சரி செய்வதில் தயிரின் பங்கு அதிகம். இதுபோன்ற சூழ்நிலைகளில் தயிரை அப்படியே சாப்பிடலாம். இதன் சிறிது வெந்தயத்தையும் கலந்து சாப்பிட வயிற்றுப்பொருமல், வயிறு உப்புசம் நீங்கும். 
4. தயிரைக் கடைந்து மோராக்கி அதனுடன் சிறிது உப்பு, கொத்தமல்லி, பெருங்காயம், கருவேப்பிலை கலந்து நீர்மோராக பருகலாம். இதனால் உடல் சூடு தனிந்து உடலுக்கு நல்ல புத்துணர்ச்சிக் கிடைக்கும். 
5. சர்க்கரை, இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிக கொழுப்புள்ள பாலில் உருவாக்கிய தயிரை சாப்பிட்டு வர நோய் குணமாகும். 
6. தயிரைக் கொண்டு தோலில் மசாஜ் செய்துவர தோலிலுள்ள நுண்துளைகளில் அழுக்குகள் நீங்கும். தோலுக்கு புத்துணர்ச்சி ஏற்படும். 
7. தயிரிலுள்ள பாக்டீரியாக்கள் விட்டமின் B கிரகிப்பதற்கு உதவுகின்றன. 
8. தயிரில் அதிகளவு கால்சியம், புரதம் போன்ற ஊட்டத்துச்சத்துகள் உள்ளது.
9. தேன்,பப்பாளியுடன் தயிரைச் சேர்த்து முகத்தில் தேய்து வர முகம் பொலிவு பெறும். 
10. மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக தயிர் அல்லது மோருடன் தேன்கலந்து கொடுப்பார்கள்.
11. மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க தயிர் பயன்படுகிறது. வயிற்றுப்போக்கின் போது தயிர் கொடுத்தால் வயிற்றுப்போக்கு கட்டுப்படும். 
11. வெயிலின் தாக்கத்தினால் தோல்களில் ஏற்படும் பாதிப்புகளை தயிர் சரி செய்கிறது. தோல் தடிப்பு வியாதிகளுக்கு தயிர் அல்லது மோர்க்கட்டு சிறந்ததொரு மருந்தாகும். 

தயிரின் முக்கியப் பயன்: 

ஒரு மனிதன் நன்றாக தூங்கி எழுந்தாலே போதும். அவனுடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் உட்பட பலரும் சொல்லும் கருத்து இது. இத்தகைய நிம்மதியான தூக்கத்தைப் பெற தயிரை உணவுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.. நிம்மதியான தூக்கத்தைப் பெறுங்கள்.! நன்றி நண்பர்களே..!
Wednesday, January 9, 2013 2 comments

ஆரோக்கியத்திற்கு 9 வகை உணவுகள்.-- உணவே மருந்து,

தவிர்க்க கூடாத ஒன்பது உணவுகள்:
நம் உடல் பாதுகாப்பாக இயங்க ஒன்பது சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்த ஒன்பது சூப்பர் உணவுகள்.
வெள்ளைப் பூண்டு:

பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள். இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.
வெங்காயம்:
வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.
காரட்:
நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் ொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.
ஆரஞ்சு :
வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.
பருப்பு வகைகள் :
பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
கோதுமை ரொட்டி :
நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தேநீர் :
தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.
பாலாடைக்கட்டி :
சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.
முட்டைக்கோஸ் :
குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.
மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்
Saturday, October 20, 2012 0 comments

சோர்வு அகல...மருத்துவ டிப்ஸ்!


சோர்வு அகல...

தக்காளியை சமைக்காமல் அப்படியே சாப்பிடுவதால், சோம்பேறித்தனம், பலவீனம், சோர்வு, முதலியன போய்விடும். இதய சம்பந்தமான நோய்களுக்கு, தக்காளி மிகச் சிறந்தது.
Saturday, October 20, 2012 0 comments

எங்க வீட்டு டயட்!---உணவே மருந்து,



Friday, October 19, 2012 0 comments

அல்சருக்கு மருந்து தேன்--உணவே மருந்து,


அல்சருக்கு மருந்து தேன்

வயிற்றில் ஏற்படும் புண், அழற்சி, ஈரல், பித்தப்பை நோய்கள் அனைத்துக்கும் மருந்தாக தேன் அமைந்துள்ளது. அதனால்தான் வயிற்றின் நண்பன் தேன் என்கிறோம்.
ஒன்று முதல் மூன்று தேக்கரண்டி தேனை 100 மி.லி. ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வர வேண்டும். இப்படி செய்தால் வயிற்றுப்புண், இரைப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும்.
இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் அமிலத்தால் வயிற்றுப் புண்ணிற்கு ஏற்படுத்தப்படும் தூண்டுதலைக் குறைத்து, எரிச்சல், வலியை நீக்கும்.
மேலும் நீர்த்தாரைப் புண், சிறுநீரக, இதய நோய்களையும் தடுக்க வல்லது தேன்.
Friday, October 19, 2012 0 comments

புத்துணர்ச்சி தரும் சுரைக்காய் ஒரு உன்னத மருந்து !!!

புத்துணர்ச்சி தரும் சுரைக்காய் ஒரு உன்னத மருந்து !!!

மனிதனின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை. 

நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர்செய்து பயன்படுத்தி வந்தனர். அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்துகொள்வோம்.

சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள். அது வெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும்.

சுரையின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

உடல் சூடு நீங்க

இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதனால்தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது.

சிறுநீர் பெருக

மனித உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள இரசாயனத் தாதுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது. சில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல் பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்து.

பித்தத்தைக் குறைக்க

உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது.

சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.

· சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

· உடலை வலுப்படுத்தும்.

· பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும்.

· இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

· குடல் புண்ணை ஆற்றும்.

· மலச்சிக்கலைப் போக்கும்

· மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.

சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.

சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.

சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் கொடுக்கலாம்.

ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
Friday, October 5, 2012 0 comments

என்றும் இளமைக்கு நெல்லிக்காய்---உணவே மருந்து,

நெல்லிக்காய் தினமும் சாப்பிட்டு வர என்றும் இளமையுடன் வாழலாம். நெல்லிக்காய் தோலின் சுருக்கங்களை குறைத்து இளமையாக தோன்ற வைக்கும். இதில் வைட்டமின் C அதிகம் உள்ளது .கல்சியம், பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின் மற்றும் வைட்டமின் பிகாம்ப்ளக்ஸ் போன்ற வைட்டமின்கள் உள்ளன. 

உடல் சோர்வு, அசதியை நெல்லிக்காய் ஜூஸ் உடனடியாக போக்கும். உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும். முடி இழப்பை தடுத்து முடியின் வளர்ச்சியை தூண்டும் மற்றும் வேர்களை வலுப்படுத்தி முடி வளர உதவுகிறது. நெல்லிக்காய் குரோமியம் கொண்டுள்ளது. 

இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். நெல்லிக்காய் இன்சுலின் சுரப்பதை தூண்டுகிறது. இதனால் நீரிழிவு நோயாளியின் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது. ரத்தத்தில் கொழுப்பின் (cholestrol) அளவை குறைகிறது. நெல்லிக்காய் இதய தசைகளை பலப்படுத்தும். 

ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். நெல்லிக்காய் அண்டிபாக்டீரியா பண்புகளை கொண்டுள்ளதால் நோய்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது. இது உடலின்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் உடல் உஷ்ணத்தை தணிக்கும். அறுசுவையும் உள்ள கனி நெல்லிக்கனி. தினமும் உணவில் உண்டு வர நாள்பட்ட அனைத்து நோய்களும் கட்டுப்படும்.
Tuesday, September 18, 2012 0 comments

பிரண்டை சப்பாத்தி---உணவே மருந்து,

என்னென்ன தேவை?
நார், கணு நீக்கி, 
நறுக்கிய பிரண்டை - 1 கைப்பிடி, 
கோதுமை மாவு - அரை கிலோ, 
நெய் - 1 டீஸ்பூன், 
பச்சை வாழைப்பழம் - பாதி, 
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
பிரண்டைத் துண்டுகளை நெய்யில் நன்கு வதக்கி, அரைக்கவும். அதை கோதுமை மாவுடன் சேர்த்து, உப்பு, வாழைப்பழம் சேர்த்துப் பிசைந்து, சப்பாத்திகளாக சுட்டெடுக்கவும்.  பிரண்டைக்கு இன்னொரு பெயர் வஜ்ரவல்லி. உடம்பை வஜ்ரம் பாய்ந்தது போல வைத்திருக்கக் கூடியது. எலும்புகளையும், நரம்புகளையும் வலுவாக்கி, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக் கூடியது.
Your Ad Here