Showing posts with label குளிர்ச்சி. Show all posts

Saturday, March 30, 2013

தாளிக்கீரை..

தாளிக்கீரை..!

இது நறுந்தாளி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் தானாக விளைந்து வீணாக போகிறது. கிராமப்புறங்களில் பரிச்சயமுள்ளவர்கள் இந்த கீரையை பார்த்திருக்கலாம்.

வேலிகள், சிறு காடுகள் ஆகியவற்றில் காணப்படும் கொடியினம். உடல் கொதி
ப்பு, எரிச்சல் போக்கும். காமம் பெருக்கும் வல்லமை படைத்தது.

இதில் இலை மட்டுமே மிகுந்த மருத்துவ குணம் கொண்டது.

இலையை பருப்புடன் சேர்த்து கடைந்து குழம்பாகவோ, கூட்டாகவோ சமைத்து உண்ண பல பலன்கள் கிடைக்கும்.

உள் உறுப்புகளில் ஏற்படும் புண், அழற்சி, வாய்ப்புண், சிறு நீரக்கப்பாதையில் தோன்றும் நோய்கள், விந்தணு குறைபாடு போன்றவை காணாமல் போகும்.

இதன் இலைகளை அரைத்து தினந்தோறும் உடலில் தலைமுதல் கால்வரை தேய்த்து குளித்து வர உடல் அரிப்பு நீங்கும்,தோல் நோய்கள் அணுகாது. சருமம் பளபளப்பு அடையும். உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்.

இதனை தொடர்ந்து உண்டுவர ஒரு சில தினங்களிலேயே குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

இனி தாளிக்கீரை என்பது என்ன?எங்கே கிடைக்கும் என்று தேடி எடுத்து பயன்படுத்தி உடலுக்கு வலு சேர்ப்போமா?