Sunday, January 27, 2013

சாப்பிட்ட உடனேயே சாய்ந்துவிடலாமா?

சாப்பிட்ட உடனேயே சாய்ந்துவிடலாமா?

இரவு சாப்பிட்ட உடன் தூங்கச் சென்றால் அஜீரணம், மலச்சிக்கல், தூக்கமின்மை எனப் பல பிரச்னைகள் உண்டாகும். சாப்பிட்ட உணவானது இரைப்பை, சிறுகுடல் எனச் செரிமானப் பாதையைக் கடப்பதற்கு குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் தேவைப்படும். ஆனால், இரவில் சாப்பிட்டு முடித்ததும் தூங்க ஆரம்பித்துவிட்டால், சாப்பிட்ட உணவானது செரிமானப் பாதையைக் கடக்கவே சிரமப்படும். அந்த நேரத்தில் செரிமான உறுப்புகளும் ஓய்வு நிலையில் இருப்பதால், உணவானது விரைவாக ஜீரணிக்கப்படாமல், நெஞ்சு எரிச்சல், தூக்கமின்மை போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, இரவு உணவை உண்ட பின் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரமாவது விழித்திருந்து அதன் பிறகே படுக்கைக்குச் செல்லலாம். சாப்பிட்ட உடன் சில நூறு அடிகள் நடப்பதும் செரிமானத்துக்கு உதவியாக இருக்கும்

No comments:

Post a Comment