Showing posts with label காசநோயை. Show all posts
Showing posts with label காசநோயை. Show all posts

Monday, July 1, 2013

புளிச்சக் கீரை

வலிமை கொடுக்கும் 
புளிச்சக் கீரை..!

பெயருக்கு ஏற்றார்போல புளிப்பு சுவையுள்ள இந்த கீரை, உடல் வலிமையை பெருக்குவதில் முதன்மை வகிக்கிறது. நோஞ்சானாக தெரியும் குழந்தைகளுக்கு அடிக்கடி இந்த கீரையை சிறிதளவெனும் சமைத்து சாப்பிட கொடுத்து வந்தால் உடம்பு தேறுவார்கள்.
இதன் மகத்துவம் தெரிந்துதான் ஆந்திர மக்கள் இந்த கீரையை "கோங்குத்ரா சட்னியாக" செய்து தினமும் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

இந்த கீரையில் தாதுபொருட்களும், இரும்பு சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. இது தவிர வைட்டமின் சத்துக்களும் கணிசமான அளவு கல்ந்துள்ளன. எல்லாவிதமான வாத கோளாறுகளையும் குணப்படுத்தும் வல்லமை இந்த கீரைக்கு உண்டு என்பார்கள். சொறி, சிரங்கு போன்ற சரும நோய் உள்ளவர்கள் இந்த கீரையை சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம் என்பார்கள்.

காசநோயை குணமாக்கும் இந்த கீரை ரத்தத்தை சுத்திகரிப்பதிலும் முதலிடம் வகிக்கிறது. உடல் உஷ்ணத்தை எப்போதும் சீராக வைத்திருக்க உதவுகிறது. அதனால்தான் இந்தகீரையை உடலுக்கும், குடலுக்கும் வளமூட்டும் கீரை என்பார்கள்.

பித்த சம்பந்தமான நோய்களை உடையவர்கள் இந்த கீரையை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. இது பித்ததை அதிகபடுத்தும் குணமுடையது