Showing posts with label சிறு நீர். Show all posts
Showing posts with label சிறு நீர். Show all posts

Monday, July 1, 2013

புதினா

புதினா:

புதினா நமதுநாட்டிற்கு புதியது. அது ஐரோப்பியாவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கக்கூடியது. உணவை செரிமானம் செய்யவும் உன்னவு செரிமானம் சம்பந்தமாக வரும் வெப்பத்தையும் சுரத்தையும் நீக்கவல்லது. இதை பற்றி பழைய மருத்துவ நூல்களில் எதுவும் குறிப்பு இருப்பதாக தெரியவில்லை .ஆனால் நமது தமிழர் உணவு பதப்படுத்துதலில் சமையலில் நீங்காத இடம் பிடித்துவிட்டது .! கொத்தமல்லி கருவேப்பிலை புதினா என்பது வாங்கும் போதே வழக்கமாக கூறும் நிலை வந்துவிட்டது 

தமிழ் பெயர் புதினா 
ஆங்கில பெயர் Mint
தாவரப்பெயர் Mentha spicata

இது எல்லா நாடுகளிலும் அநேகமாக விளைகிறது

100 கிராம் புதினாவில் அடங்கியிர்க்கும் சத்து
சக்தி (Energy) 48 கலோரிகள்
ஈரப்பதம்/நீர் (Moisture) 84.9 கிராம்
புரதம் (Protein) 4.8 கிராம்
கொழுப்பு (Fat) 0.6 கிராம்
தாதுக்கள் (Minerals) 1.9 கிராம்
நார்ச்சத்து (Fibre) 2 கிராம்
கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates) 5.8 கிராம்
கால்சியம் (Calcium) 200 மி.கி
பாஸ்பரஸ் (Phosporous) 62 மி.கி
இரும்பு (Iron) 15.6 மி.கி
மெக்னீஸியம் (Magnesium) 60 மி.கி
செம்பு (Copper) 0.18 மி.கி
மாங்கனீசு (Manganese) 0.57 மி.கி
ஸிங்க்/நாகம் (Zinc) 0.44 மி.கி
குரோமியம் (Chromium) 0.008 மி.கி
கந்தகம் (Sulphur) 84 மி.கி
வைட்டமின் சி (Vitamin C) 27 மி.கி
Source: National Institute of Nutrition - Hyderabad
இவ்வாறு அரிய பல தாதுக்களை தன்னகத்தே கொண்டுள்ளது .

புதினா கீரையை சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு, சீரகம் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அருந்தி வந்தால் வாயுத் தொல்லை, வயிற்றுக் கோளாறுகள், சிறுநீரக கல்லடைப்பு, குழந்தைகளின் மலக்குடலில் உள்ள பூச்சிகிள் எல்லாம் போகும்.

முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினாவை சூப்செய்து சாப்பிடுவது நல்லது.

புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

சிறு நீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாக் குடிநீர் தயார் செய்து குடித்து வர எரிச்சல் தணியும். உடல் உஷ்ணம் தணியும்.

பெண்களுக்கு மாத விலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி நீங்கப் புதினாக் குடிநீர் குடித்து வந்தால் குறையும் புதினாவில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் மருத்துவ குணம் உடையது .

புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து . சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகுக்கு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பள பளக்கும்

மாமிசங்களை பத்தப்படுத்தும் ஆற்றல் புதினாவுக்கு உண்டு. அசைவ சமையலில் நிச்சயம் இடம் பெறும் . வாய்நாற்றத்தை போக்கும். வல்லமை படித்தது புதிதாக வந்ததால் சித்தர்கள் யாரும் இதைப்பற்றி குறிப்பிடவில்லை போலும். ஆனால் இதைப்பற்றிய குறிப்பு சென்ற நூற்றாண்டில் எழுத்தப்பட்ட வைத்திய நூல்களில் இடம்பெற்றுள்ளது . இது பெருவாரியாக பயிர் செய்யப்பட்டு மருத்துவ தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிற