Showing posts with label பழம். Show all posts

Wednesday, March 13, 2013

பழங்களை எப்போது, எப்படி சாப்பிட வேண்டும்?

-------------------------------------------------------------------

சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் செரிக்கும். உணவு ஜீரணமாக கூடுதல் நேரமாகும். உணவு செரிக்காத நிலையில் உடனே பழம் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானம் ஆகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும். எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு அல்லது சாப்பிட்டு ஒரு மணி நேரம் பின்னர் பழம் சாப்பிடுவதுதான் உடலுக்கு நல்லது.

பழங்களைத் தனியாக சாப்பிடாமல். அதனுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஜூஸாகக் குடிக்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. இது சரியல்ல. பழங்களை ஜூஸாக சாப்பிடுவதை விட பழமாக சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச் சத்து நிறைய கிடைக்கும்.

காலையில் படுக்கையிலிருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப் பொருட்களை மலமாக வெளியேற்றும். இதனால், உடலுக்குப் புத்துணர்ச்சியும் தெம்பும் கிடைக்கும் .

Like ·  ·  · 6 hours ago · 

Sunday, February 24, 2013

பழங்களின் மருத்துவ குணங்கள்:

பழங்களின் மருத்துவ குணங்கள்:

1.வாழைப்பழம்
கல்லீரல் வீக்கத்தை குறைக்கும். உடலின் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். மலச்சிக்கலை போக்கும். இரும்புச்சத்து மிக்கது.

2.ஆப்பிள்
வயிற்றுப் போக்கு, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவற்றிற்கு நல்லது

3.நாவல் பழம்
நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும்.

4.திராட்சை
குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு வீதம் தினம் 2 வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும்.

5.மாம்பழம்
ரத்த அழுத்தம் சீராக்கும்.

6.கொய்யாப்பழம்
உடல் வளர்ச்சியும், எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும்.

7.பப்பாளி
மூல நோய், சர்க்கரை நோய், குடல் அலர்ஜி போன்றவைகளுக்கு சிறந்தது.

8.செர்ரி திராட்சை
கர்ப்பப்பை வியாதிகளுக்கு நல்லது.