Showing posts with label விந்து. Show all posts
Showing posts with label விந்து. Show all posts

Monday, March 4, 2013

புடலங்காய் உடல்நல நன்மைகள்:-

புடலங்காய் உடல்நல நன்மைகள்:-

ஆண்மையை அதிகரிக்கும் புடலங்காய் !!!

புடலங்காய் நம் தமிழர்கள் வீட்டில் நிச்சயம் சமைக்கும் காய். புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொறியல், புடலங்காய் குழம்பு என்று நம் மக்கள் தங்களது கைவண்ணத்தில் சமையலில் அசத்துவர். இந்த காய் நம் முன்னோர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த காய். இதன் பயன் அறிந்து தான் சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். இது ஓர் அற்புதமான சத்துள்ள உணவு கிடைக்கும் போது வாங்கி சாப்பிடுங்கள்..

புடலன்க்காயில் நன்கு முற்றிய கையே உண்பது நல்லது அல்ல .பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி உள்ள கையே பயன் படுத்த வேண்டும்

1.விந்துவை கெட்டி படுத்தும் ,ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது புடலங்காய்
காமத்தன்மை பெருகும் வல்லமையும் புடலங்காய்க்கு உண்டு

2.தேகம் மெலிந்து இருபவர்கள் அடிக்கடி புடங்கையே உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேகம் பருமன் அடையும்

3.அஜீரண கொலரை எளிதில் சீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும்.

4.குடல் புன்னை ஆற்றும் .வைத்து புண் , தொண்டை புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேற்கொண்ட நோயின் பாதிப்பு பெருமளவு குறையும்

5.இதில் நார் சத்து அதிகம் இருப்பதால் மலசிக்கலை போக்கும் தன்மை உடையாதாக இருக்கிறது

6.மூல நோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் நல்ல மருந்தாக இருக்கிறது

7.நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து நியாபக சக்தியே அதிகரிகிறது

8.பெண்களுக்கு உண்டாக்கும் வெள்ளை படுதலை குணபடுத்தும் கருப்பைக் கோளாறையும் குணா படுத்தும்
கண் பார்வையே அதிகரிக்க செய்யும்

9.இதில் அதிகம் நீர்சத்து இருபதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை சிறுநீர் மூலம் வெளியேற்றும்

10. வாத, பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களை போக்கும்.