Showing posts with label diabetes. Show all posts
Showing posts with label diabetes. Show all posts

Wednesday, February 20, 2013

நலம் தரும் நெல்லிக்காய் ஜூஸ்

நலம் தரும் நெல்லிக்காய் ஜூஸ்
_________________________________

கோடை காலத்தில் உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் மிகவும் நல்லது. (ஜில்லுன்னு குடிங்க!)

கண் பார்வை அதிகரிக்கும். நெல்லிக்காய் சாறு உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றிவிடும். (இளமைக்கு கியாரண்டி!)

ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகமாகி, ஞாபக சக்தியும் அதிகரிக்கும். (ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே என்று பாடலாம்!)

தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூல் குடித்து வர, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து விடும். (உடல் எடை குறைந்து ஸ்லிம் ஆகிடுங்க!)

நெல்லிக்காய் ஜூஸ் சரும பிரச்சனைகளை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்தது. குறிப்பாக முகப்பரு, பிம்பிள் உள்ளவர்கள், அதனை குடித்தால் போக்கிவிடலாம். (சூப்பர், சூப்பர்!)

நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால், நல்லது. (ட்ரை பண்ணிப் பாருங்களேன்!)

ஆஸ்துமா நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும்

நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்

இரத்த சுத்திகரிப்பு நல்ல ஃப்ரஷ்ஷான நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும். 

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலைப் போக்குவதற்கு, தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும். 

மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும் போது, தினமும் மூன்று முறை சிறிது நெல்லிக்காய் ஜூஸையும், கனிந்த வாழைப்பழத்தையும் சாப்பிட்டால், சரிசெய்துவிடலாம். 

உடலில் இரத்தம் குறைவினால் ஏற்படும் ஞாபக மறதியைத் தடுக்க, தினமும் நெல்லிக்காய் சாற்றை குடித்தால், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகமாகி, ஞாபக சக்தியும் அதிகரிக்கும். 

இதயம் பலவீனமாக இருப்பவர்கள், தினமும் நெல்லிக்காய் சாற்றை அளவாக குடித்து வந்தால், இதயத்தில் ஏற்படும் பிரச்சனையை சரிசெய்யலாம். 

நெல்லிக்காய் சாற்றைக் குடித்தால், கண் பார்வை அதிகரிக்கும். 

Saturday, February 16, 2013

சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கருப்பட்டி!

சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கருப்பட்டி!

பனங்கருப்பட்டியின் மருத்துவ குணங்களைப் பற்றி பேசிய காரைக்-குடியைச் சேர்ந்த சித்த மருத்துவர். சொக்க-லிங்கம், ‘‘இன்றைக்கு அனைத்து வகையான மூலிகைகளும் மிட்டாய் வடிவில் கிடைக்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது... கருப்பட்டி. இதன் மருத்துவ பயன்கள் அளவில்லாதது. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்... இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கி-யமாக இருக்கும்.

சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை, கருப்பட்டி-யுடன் சேர்த்துச் சாப்பிட்டால், வாயுத்தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்... உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளி-களும்கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்... சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது’’ என்றார்.

Saturday, February 9, 2013

diabetes

தெரியுமா?

20 நிமிடங்கள் வீதம் வாரத்துக்கு மூன்று நாட்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை 33 சதவிகிதம் குறைக்க முடியும்..