Showing posts with label மாத்திரைகள். Show all posts
Showing posts with label மாத்திரைகள். Show all posts

Saturday, February 16, 2013

ஆபத்தாகும் மாத்திரைகள்

ஆபத்தாகும் மாத்திரைகள்....

சிலர் காய்ச்சல் தலைவலி என எதற்கு எடுத்தாலும் அதிகம் எடுத்து கொள்ளும் ஒரு மாத்திரை பாராசிடம்மல் தொடர்ந்து அதிகமாக பாராசிடம்மல் வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதால் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

நாம் உட்டகொள்ளும் வலி நிவாரணி சிறிது சிறிதாக உடலில் தேங்கினாலும் அது ஒரு குறிப்பிட் அளவு சேர்ந்ததும் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கின்றனர்.

முந்தைய ஆண்டுகளில் 150 க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறாக உயிரிழந்து உள்ளதை எடின்பர்க் என்ற ம
த்துவமனை பதிவு செய்யதுள்ளது என்று பல்கலை கழக ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பராசிட்டம்மால் உட்கொண்ட சில மணி நேரத்திலே வலி பறந்து ஒடுகிறது என பலர் இதனை எடுத்து கொள்கின்றனர்.இதில் ஒரு நபர் உட்கொள்ளும் அளவை விட சற்று கூடுதலான அளவில் பாரசிட்டம்மால் மருந்தை உட்கொள்கிறோம் என்பதை உணராமலேயே பலர் இருந்துள்ளனர் என்று அவர்கள் கூறுகின்றனர்

நீங்களும் வலி நிவாரணி மாத்திரைனகை உட்டகொள்பவராக இருந்தால் இதை கவணத்தில் கொள்ளுங்கள் உங்கள் உடல் நலம் உங்கள் கையில் தான் உள்ளது