பசித்தால்... படபடப்பு அதிகமாகும்!
பசி நேரத்தில் நம் உடலில் சர்க்கரையின் அளவு குறையும். அதனால் படபடப்பு, சோர்வு, கோபம் ஏற்படும். சாப்பிட்டபின் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்தவுடன், இவ்வுணர்வுகள் எல்லாம் அடங்கிவிடும். அரிசியால் தயாரிக்கப்படும் இட்லி, தோசை போன்ற உணவுகளில் மாவுச் சத்து அதிகம் உள்ளதால், அவற்றைச் சாப்பிட்டவுடன் சர்க்கரையின் அளவு அதிகரித்து உடலுக்குத் தேவையான சக்தி உடனே கிடைக்கிறது.
தினமும் நாம் நேரம் தவறாது சாப்பிட்டால் அந்த நாளின் உற்சாகத்தை அப்படியே தக்க வைத்துக் கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் மேலாக சமச்சீர் உணவைச் சாப்பிட்டால் நம் உடல் மட்டுமல்ல மனதும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
No comments:
Post a Comment