சர்பத் குடிக்கலாம் வாங்க...!
நன்னாரி, வெட்டிவேர் சர்பத்...வெயில் காலத்தில் உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும் பாரம்பரிய பானம் இது.
தேவையானவை: நன்னாரி, வெட்டிவேர், வெல்லம் - தலா 50 கிராம்.
செய்முறை: நன்னாரியை சுத்தம் செய்து சிறு, சிறு துண்டுகளாக்கிக்கொள்ளவும், வெட்டி வேரையும் சிறு துண்டுகளாக்கவும். ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து 2-3 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவைக்கவும். பிறகு, இறக்கி வடிகட்டிக்கொள்ளவும்.
வடிகட்டிய கஷாயத்துடன் பொடித்த வெல்லம் சேர்த்து அடுப்பில் ஏற்றி காய்ச்சி, வெல்லம் உருகி பாகுப் பதம் வந்ததும் இறக்கி, மீண்டும் வடிகட்டி உபயோகப்படுத்தவும். ஒரு பங்கு சர்பத், ஒரு பங்கு குளிர்ந்த நீர் சேர்த்துப் பரிமாறலாம்.

No comments:
Post a Comment