Timeline Photos
![]() |
உடல் நலம் பாதுகாக்க எளிய காலை உணவு =ஒரு சிறிய அறிமுகம்! ! ! !
காலை எழுந்தவுடன் பல் துலக்கி வெறும் வயிற்றில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் அருந்தவும் . காலைக் கடன்களை முடிக்கவும் .. சிறிய எளிய உடற்ப் பயிற்சி செய்யுங்கள் . பின் நடைப் பயிற்சி சுமார் ஐந்துகிலோமீட்டர் நடக்கவும் . காய்கறி - இலைச்சாறு சுமார் 300 to 400 மில்லி லிட்டர் அருந்தவும் . (காய்கறி வகைகளில் நீர்க் காய்கறிகள்ஆகிய வெள்ளரி,பீர்க்கு ,புடலை,சுரை மற்றும் காரட்,பீட்ருட்,கோஸ்,தக்காள போன்றவை .. இலை வகைகளில் கீரை வகைகள் ,வெற்றிலை,துளசி,முருங்கை,க புதினா,செம்பருத்தி போன்றவை) ஒரு நபரின் தேவைக்கு நான்கைந்து காய்கறிகள் உபயோகித்தால் அரை இஞ்ச் முதல் ஒரு இஞ்ச வரை காய்கறித்துண்டின் நீளம் இருக்கலாம் .இலைகள் ஒரு கைப்பிடிஇருக்குமாறு பார்த்துக் கொள்ளவும் . பின் ஒரு அரை மணி நேரம் கழித்து முளைக் கட்டிய பயறு சார்ந்த கலவைஒரு கப் அளவுக்கு சாப்பிடவும் . முளைக் கட்டிய பாசிப்பயறு, கொண்டைக்கடலை, கொள்ளு.. ஊறவைத்த வேர்க்கடலை, தேங்காய்,மாதுளைமுத்துக்கள் 1. முளைக் கட்டிய பயறில் மூன்றுவகை எடுத்துக் கொள்ளவும்,(அதில் பாசிப் பயறு எப்போதும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்) 2. ஊறவைத்த வேர்க்கடலை,எள்ளு,சோயாபோன்ற 3. தேங்காய் எப்போதும் வைத்துக் கொள்ளவும் . 4. பேரீச்சம் பழம் அல்லது மாதுளம் பழம் சேர்த்துக் கொள்ளவும் .. எலுமிச்சை சாறு சேர்ப்பது உங்கள் விருப்பம் . இது நான் கடைப் பிடிக்கும் முறைஉடல் நலம் பாதுகாக்க எளிய காலை உணவு =ஒரு சிறிய அறிமுகம்! ! ! ! |
No comments:
Post a Comment