Sunday, April 21, 2013

உடலை கெடுக்கும்.... ஜில், ஜில் தண்ணீர் !

உடலை கெடுக்கும்....
ஜில், ஜில் தண்ணீர் !


வெயில் காலம் வந்தாச்சி, பெரும்பாலும் பிரிட்ஜில் வைச்ச ஜில் தண்ணீரை குடிச்சிக்கிட்டு இருக்கோம். ஆனா, இந்த தண்ணீரை குடிச்சா என்னவெல்லாம் ஆகும்ன்னு மருத்துவ விஞ்ஞானிங்க பட்டியல் போட்டு சொல்றாங்க....


ஜில் தண்ணீர் இதயத்தை பதம் பார்க்குதாம். புற்றுநோய்க்கும் வழிகாட்டுதாம். உணவு சாப்பிடவுடனே, குளிர்ச்சியான தண்ணீரை குடிச்சா, அது நாம் சாப்பிட்ட உணவில்ல இருக்கிற எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடும். இதனால, சாப்பிட்ட உணவு ஜீரண சிக்கல் ஏற்படும்.

அதுமட்டுமா, உடலில் இருக்குற கொழுப்பு அளவு அதிகரிக்கவும் அது காரணமாகிடும். போறப் போக்குல சிறுநீரகத்தையும் ஓட்டைப்போடுமாம். மாரடைப்பு வந்தவங்க, இதயநோய்க்கு ஆளானவங்க சாப்பிடும்போது குளிர்ந்த நீரை தொடவேக் கூடாது. இன்னும் நெஞ்செரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு,
பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்கள் பாதிப்பு....ன்னு பட்டியல் நீளுது.

எதுக்கு இந்த பிரிட்ஜி, கிட்ஜின்னு வேண்டாத வேலை. பேசமா, ரூபாய் 100, 200 க்கு கிடைக்கிற மண் பானை வாங்கி தண்ணீர் குடிப்போம். நோய் நொடி இல்லாம இருப்போம்

No comments:

Post a Comment