Sunday, January 27, 2013

நோயின்றி வாழ சித்த மருத்துவம் கூறும் நல்வழிகள்

நோயின்றி வாழ சித்த மருத்துவம் கூறும் நல்வழிகள்

இரவில் பசும் பாலையே அருந்த வேண்டும்.( மந்தம் தரும் வேறு பாலை அருந்தக் கூடாது)

மூலநோயினை உண்டாக்கும் காய்கறிகளை உண்ணக் கூடாது.

புளித்த தயிரையே மோராகச் செய்து அருந்த வேண்டும்.

முன்தினம் செய்த கறி அமுதிற்கு ஒப்பு எனினும் அதை அருந்தக் கூடாது.

பசித்த பின்பே புசிக்க வேண்டும்.

நாள் ஒன்றிற்கு இரு முறைதான் உணவு உட்கொள்ளவேண்டும். மூன்று முறை உட்கொள்ளக்கூடாது.

கிழங்கு வகைகளில் கருணைக் கிழங்கைத் தவிர மற்ற கிழங்கு வகைகளைப் புசிக்கக் கூடாது.

உண்ணும்போது இடை இடையே நீர் அருந்தக் கூடாது.

உண்ட பின்பு சிறிது தூரம் நடக்க வேண்டும்.

மலம், சிறுநீர் ஆகியவைகளை அடக்கக் கூடாது.

ஆறு திங்கட்கு ஒரு முறை பேதியும், மூன்று திங்கட்கு ஒரு முறை வாந்தியும் வர மருந்துகள் உண்ண வேண்டும்.

இடக்கையை கீழே வைத்து உறங்கவேண்டும்.

நான்கு தினத்திற்கு ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து தலை முழுக வேண்டும்.

இரவில் மரங்களின் நிழலில் தங்கக்கூடாதுsure

No comments:

Post a Comment