Sunday, January 27, 2013

எலுமிச்சையின் பலன்கள்

எலுமிச்சையின் பலன்கள்

எலுமிச்சைச் சாற்றுடன் தேன் கலந்து குடிக்க, வறட்டு இருமல் குணமாகும். 

றஎலுமிச்சைச் சாற்றில் சீரகத்தைக் கொட்டி இரண்டு நாட்களுக்கு ஊற வைக்கவும். பின்னர், அந்தச் சாறுடன் சேர்த்து வெயிலில் நன்றாகக் காயவைக்கவும். சீரகமானது நன்றாக உலர்ந்ததும், மறுபடியும் எலுமிச்சைச் சாற்றில் ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து, வெயிலில் காயவைக்கவும். நன்றாகக் காய்ந்ததும் எடுத்துப் பொடிசெய்து கொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு ஸ்பூன் எடுத்து தேன் அல்லது தண்ணீரில் கலந்து தினமும் மூன்றுவேளை உட்கொள்ள அஜீரணம், பித்தம், ரத்த அழுத்தம் சீராகும்.

ஒரு முழு எலுமிச்சையின் சாற்றை அரை டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க, வயிற்றுப்போக்கு சரியாகும்.

எலுமிச்சைப் பழத்தின் சாறை வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வயிறு வீக்கம், வாயுத் தொல்லை நீங்கும்.

எலுமிச்சைச் சாற்றைத் தலையில் தடவிச் சிறிது நேரம் ஊறவைத்துக் குளிக்க பித்தம் தணியும்; உஷ்ணம் குறைந்து குளிர்ச்சி உண்டாகும். எலுமிச்சைச் சாறை உடலில் தேய்த்துக் குளித்தால் உடல் வறட்சி நீங்கும்.

No comments:

Post a Comment