'இருமலைக் குணமாக்க தேன் நல்லதொரு மருந்து' என்பது நம்மூர் பாட்டி வைத்தியம்! ஆனால், இந்த உண்மை இப்போதுதான் அமெரிக்கர்களுக்கு உறைத்து இருக்கிறது.
சில நேரங்களில் இடைவிடாத இருமல் தொல்லை பாடாய்ப்படுத்தும். இரவில் தூங்குகிற சமயங்களில் இந்தத் தொடர் இருமல் வந்துவிட்டால்... படும் அவஸ்தையை சொல்லி மாளாது. இதனைத் தடுக்க வழி தெரியாமல் திணறிய அமெரிக்க சுகாதாரத் துறையினர் இப்போது எளிய வழி ஒன்றைக் கண்டுபிடித்து உள்ளனர். அதுதான் தேன் மருத்துவம்! 'குழந்தைகள் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு ஒரு தேக்கரண்டி தேன் குடிக்கச் செய்தால் போதும். இது அடிக்கடி ஏற்படும் இருமல் தொல்லையைக் குறைப்பதோடு நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கவும் வழி செய்கிறது' என்று அறிவித்திருக்கிறார்கள். இவ்வளவு லேட்டா இருக்காங்களே!
Thanks
Suresh Devaraj
No comments:
Post a Comment