Sunday, January 27, 2013

சர்க்கரை நோய்க்கு சித்த மருத்துவம் கூறும் எளிய மருத்துவ முறைகள்

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது நமது ரத்தக் குழாய்கள் இதயம், சிறுநீரகம், கண்-விழித்-திரை உட்பட உடலின் பல பகுதிகளையும் பாதிக்கிறது. அதிகரித்த சர்க்கரையினால் கிருமிகளும் உற்சாகமாக உடலைத் தாக்குகின்றன. எனவே, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிக அவசியம்.

சர்க்கரை நோய்க்கு சித்த மருத்துவம் கூறும் எளிய மருத்துவ முறைகள்:

ஆவாரையின் இலை, பூ, காய், பட்டை, வேர், பிசின் முதலியவற்றில் ஆன்தோசயனின், டானின், ஃபீனால்கள் உள்ளதால் இவை சர்க்கரை நோயைப் போக்குவதில் சிறப்பாகச் செயல்படுகின்றன.

தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் ஐந்து நாவல் பழங்களைச் சாப்பிட வேண்டும். நாவல் பழத்தில் உள்ள ஆன்தோசயனின் மிகச் சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகச் செயல்பட்டு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். சர்க்கரை நோயினால் ரத்தக் குழாய்கள், கண்களின் விழித்திரை மற்றும் உடலின் அடிப்படைச் சவ்வுகளில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும்.

நாவல் கொட்டைப் பொடியை 200 மி.கி. அளவு இரு வேளைகளும் உண்ண வேண்டும். இதில் உள்ள கிளைகோஸைடு ஜம்போலின் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.

பாகற்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். பாகற்காயில் உள்ள பாலிபெப்டைடு தாவர இன்சுலினாகச் செயல்படுகிறது. பாகற்காயில் உள்ள சாரன்டின், குளுகோஸை செல்கள் உபயோகிப்பதை ஊக்குவிக்கிறது.

No comments:

Post a Comment